Research Summary
Topic
பாடசாலை மட்ட அபிவிருத்தித் திட்டமும் கற்றல் கற்பித்தல் செயன்முறையும்
Author MR.SHIVANANTHAM SRITHARAN
Sri Lanka Education Administrative Service-Class I
Co-Author MR.Sabaretnam Athirathan
Senior Lecturer, Faculty of Education University of Colombo, Sri Lanka.
Abstract இவ் ஆய்வானது மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிருப்புக் கல்வி வலயத்தில் உள்ள பாடசாலைகளின் பாடசாலை மட்ட அபிவிருத்தி திட்டமானது மாணவர்களின் கற்றல் கற்பித்தல் செயன்முறைக்கு எந்த அளவிற்கு பங்களிப்புச் செய்கின்றது என்பதனை மதிப்பீடு செய்தலையும் அது பற்றிய உண்மை நிலமையை ஆராய்ந்தறிவதற்காகவும் மேற்கொள்ளப்பட்டது.

இவ் ஆய்வு விவரண ஆய்வாகவும் கலப்பு ஆராய்ச்சி முறையின் கீழ் முன்னெடுக்கப்பட்ட ஆய்வாகவும் காணப்படுகின்றது.

இலக்கு மாதிரிகளாக 60 பாடசாலை அதிபர்களும் மேலும் 37 பகுதித் தலைவர்களும் 37 பாடசாலை முகாமைத்துவக் குழுவைச் சேர்ந்த ஆசிரியர்களும் திட்டமிடல் பிரதிக் கல்விப் பணிப்பாளர் உட்பட 6 இலங்கை கல்வி நிர்வாக சேவை உத்தியோகத்தர்களும் தெரிவு செய்யப்பட்டு ஆய்வில் ஈடுபடுத்தப்பட்டனர்.

மொத்தம் 140 மாதிரிகள் பதிலளிப்பவர்களாக இருந்தனர்.

ஆய்வுக்கான தரவுகளை சேகரிக்க வினாக்கொத்து, நேர்காணல், அவதானிப்பு, மற்றும் ஆவணப்பகுப்பாய்வு என்பன பயன்படுத்தப்பட்டன.

தரவு பகுப்பாய்வில் SPSS Version 22 ஐயும் Microsoft Excel ஐயும் பயன்படுத்தி தரவுகள் செயன்முறைப்படுத்தப்பட்டன. முதலில் பாடசாலை மட்ட அபிவிருத்தித் திட்டத்தின் 10 அம்சங்கள் (Parameters) உள்வாங்கப்பட்டு தயாரிக்கப்பட்ட நிலைமை பற்றிய ஆவணப் பகுப்பாய்வுசெய்யப்பட்டது. அதன் மூலம் கிடைத்த கூட்டுச் சராசரி நியம விலகல்கள் முறையே 51.17 மற்றும் 15.94 ஆகும். இவற்றுறுக்கு வ சோதனை செய்த பார்த்தபொழுதுஇ 5% முக்கியத்துவ அளவில பொருண்மியத் தொடர்பு உண்டு என நிரூபிக்கப்பட்மையினால் Ho: தயாரிக்கப்பட்டு நடைமுறைப்படத்தப்படும் பாடசாலை மட்ட அபிவிருத்தித் திட்டங்கள் குறைபாடுடையன என்பது ஏற்றுக் கொள்ளப்பட்டது. மேலும், பாடசாலை மட்ட அபிவிருத்தித் திட்டத்துடன் தொடர்புடைய மற்றும் கற்றல் -கற்பித்தல் செய்முறையுடன் தொடர்புடைய 25 காரணிகள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டன. பாடசாலை மட்டத் அபிவிருத்திட் திட்டம் (X), கற்றல்-கற்பித்தல் செயன்முறை (Y) ஆகிய இரண்டு மாறிகளுக்கும் இடையிலான ஸ்பியர்மனின் தர வரிசை இணைவுக் குணகம் R= + 0.1265 அளவில் காணப்பட்டதனால் இரண்டிற்கும் நேரிணைவு உண்டு எனக் கண்டறிகை செய்யப்பட்டது. அதிபர்கள், பகுதித்த தலைவர்கள் முகாமைத்துவக் குழு ஆசிரியர்கள், கல்வி நிர்வாக சேவை உத்தியோகத்தர்கள் போன்றோர் இயலுமானவரை அக்கறை கொள்வதன் மூலம் பாடசாலை மட்ட அபிவிருத்தித் திட்டத்திற்கும் கற்றல் கற்பித்தல் செயன்முறைக்குமான இடைவெளியை குறைத்து பாடசாலை மட்ட அபிவிருத்தித் திட்டமானது உயர்ந்த பட்ச அளவில் கற்றல் - கற்பித்தல் செயன்முறைக்கு பங்களிப்புச் செய்வது அவசியமானதாகும் என இவ் ஆய்வு உறுதி செய்தது.
Keywords School Based Development Plan
Teaching-Learning process

No comments:

Post a Comment